... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு

கட்டாக்: ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பிரிவில் மருத்துவ சிகிச்சையில் இருந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர், அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய மருத்துவ கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையறிந்து சம்பவ இடத்துக்கு ஒடிசா மாநில முதல்வர் மோகன் மாஜி, தீ விபத்தில் இருந்து தப்பிய நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சட்ட ரீதியான விசாரணை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார். ரூ.25 லட்சம் நிவாரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. மேலும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News