ஆஸ்கர் 2026; விருது வென்றவர்களின் முழு பட்டியல்!
திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 98வது ஆண்டு ஆஸ்கர் விழா தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் அதிக பட்சமாக பால் தாமஸ் ஆண்டர்சன் - லியோனார்டோ டிகாப்ரியோ கூட்டணியில் வெளியான ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படம் வென்றுள்ளது. இதையடுத்து ஆஸ்கர் வரலாற்றில் அதிக நாமினேஷனில் பரிந்துரைக்கப்பட்ட(16 பிரிவிகள்) சின்னர்ஸ் படம் 4 விருதுகளை வென்றுள்ளது. விருது வென்றவர்களின் முழுப் பட்டியல் பின் வருமாறு.
சிறந்த படம் - ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’
சிறந்த இயக்குநர் - பால் தாமஸ் ஆண்டர்சன்(ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்)
சிறந்த நடிகர் - மைக்கேல் பி ஜோர்டான்(சின்னர்ஸ்)
சிறந்த நடிகை - ஜெஸ்ஸி பக்லி(ஹேம்நெட்)
சிறந்த துணை நடிகர் - ஷான் பென்(ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்)
சிறந்த துணை நடிகை - ஏமி மடிகன்(வெப்பன்ஸ்)
சிறந்த Adapted திரைக்கதை - பால் தாமஸ் ஆண்டர்சன்(ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்)
சிறந்த திரைக்கதை - ரியான் கூக்லர்(சின்னர்ஸ்)
சிறந்த ஆவணப்படம் - மிஸ்டர் நோபடி அகென்ஸ்ட் புதின்(Mr. Nobody Against Putin)
சிறந்த ஆவண குறும்படம் - ஆல் தி எம்ப்டி ரூம்ஸ்(All the Empty Rooms)
சிறந்த அனிமேஷன் படம் - கே.பாப் டிமன் ஹன்டர்ஸ்(KPop Demon Hunters)
சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி கேர்ள் ஹூ க்ரைட் பியர்ஸ்ல்(The Girl Who Cried Pearsl)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆட்டம் டுரால்ட் ஆர்காபா(சின்னர்ஸ்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கேட் ஹாவ்லி(ஃபிராங்கன்ஸ்டைன்)
சிறந்த படத்தொகுப்பாளர் - ஆண்டி ஜர்கென்சென்(ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)
சிறந்த சர்வதேச திரைப்படம் - சென்டிமென்டல் வேல்யூ(நார்வே நாட்டு படம்)
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - தி சிங்கர்ஸ் மற்றும் டூ பீப்பிள் எக்ஸ்சேஞ்சிங் சலிவா(Two People Exchanging Saliva)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல், கிளியோனா(ஃபிராங்கன்ஸ்டைன்)
சிறந்த பின்னணி இசை - லூத்விக் கோரன்சன்(சின்னர்ஸ்)
சிறந்த பாடல் - கோல்டன்(கே.பாப் டிமான் ஹன்டர்ஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஃபிராங்கன்ஸ்டைன்
சிறந்த ஒலி - எஃப் 1
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்
சிறந்த நடிகர்கள் தேர்வு - ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்