... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
# இந்த வாரத்தில் 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை!

இந்த வாரத்தில் 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை!

Bank Holidays This Week : 
மக்கள், தங்களின் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வங்கிகளுக்கு செல்வது தேவியாக இருக்கிறது. இதனால், வங்கிகளுக்கு, எந்தெந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அப்படி, இந்த வாரம் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது என்பதை இங்கு பார்ப்போம்.

வங்கி விடுமுறைகள்:
 வங்கிகளுக்கு இந்த வாரம், வார இறுதிநாள் விடுமுறைகள், முக்கிய பண்டிகைகள் காரணமாக, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்பட இருக்கிறது. இதனால், வங்கிகள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில், எந்தெந்த நாட்களில் விடுமுறை விடுமுறை விடப்படுகிறது என்பதையும், நிதி தேவைகளுக்காக வங்கிகளுக்கு செல்வதற்கு எப்படி திட்டமிட்டுக்கொள்வது என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உகாதி:
 மார்ச் 19ஆம் தேதியான வியாழக்கிழமை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை அந்த மாநிலத்தில் குடி பத்வா என்று கூறுவர். இதனை முன்னிட்டு, அம்மாநிலம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு விடுமுறையில் வங்கிகள் இயங்காது. தமிழ்நாட்டிலும் உகாதியை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அன்றைய தினத்தில் தமிழ்நாட்டிலும் வங்கிகள் இயங்காது.

மார்ச் 20:
 வெள்ளிக்கிழமையான மார்ச் 20ஆம் தேதி, ஈத்-உல்-பித்ர் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவின் சில இடங்களில் இதையொட்டி வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர், கேரளா, ஸ்ரீநகர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகை: மார்ச் மாதம் முழுவதும் புனித நோன்பு மாதமாக கருதப்படுகிறது. இதில் இறுதி நோன்பு நாள், ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ரமலான் பண்டிகையானது, வரும் சனிக்கிழமை அல்லது வெள்ளியன்று கொண்டாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறை தெரிவதை பொறுத்து இந்த நாள் அமைவதால் அதை வைத்துதான் சரியாக எந்த நாளில் ரமலான் கொண்டாடப்படுகிறது என்றும், எந்த தினத்தில் வங்கி விடுமுறை என்றும் சொல்ல முடியும். இப்போதைக்கு, சனிக்கிழமை ரமலான் பண்டிகை தினம் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை:
 மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த நாள் வழக்கமான அரசு விடுமுறை நாள் என்பதாலும், வழக்கமான வாராந்திர விடுமுறை நாள் என்பதாலும் எந்த வங்கியும் இந்த நாளில் இயங்காது. இப்படி தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு இந்த வாரத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Source : Zee News Tamil

2 hours ago

Home Flash News