... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#`பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்’ - தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர்!

`பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்’ - தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பட்டியலை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் பழனியில் அதிமுக வேட்பாளரே போட்டியிடுவார் என அறிவித்துள்ளதால், பாஜக-வினர் அதிருப்தியடைந்தனர். முருகனின் ஆறுபடைவீடுகளிலும் பாஜக-வினர் சீட் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் திருச்செந்தூர் தொகுதி மட்டுமே பாஜக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளில் உள்ள பாஜக-வினர் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக முருகன் மாநாடு, வேல் யாத்திரை ஆகியவற்றை நடத்தி வரும் பாஜக-வினர், பழனி தொகுதி இந்த முறை தங்களுக்குத்தான் ஒதுக்குவார்கள் எனச் சொல்லி வந்தனர்.

இந்நிலையில் பழனி சட்டமன்றத் தொகுதி தங்களுக்கு அறிவிக்கபடாததால் விரக்தியடைந்து இன்று காலை சாலையில் கூடிய பாஜகவி-னர், “பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பியதோடு தேங்காய்களை உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

Source : Vikatan

2 hours ago

Home Flash News