தொகுதி மாறினார் செந்தில் பாலாஜி : கரூர் டூ கோவை - காரணம் இது தான்..!
தமிழக சட்டசபை தொகுதிகள், 2008ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அப்போது, கோவை மேற்கு தொகுதி, தெற்காக மாறியது. அதன்பின், 2011 முதல் 2021 வரை மூன்று முறை தேர்தல் நடந்து விட்டது; மூன்று முறையும் அ.தி.மு.க.,வே வென்றிருக்கிறது. மறுசீரமைப்புக்கு முன், தி.மு.க., 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை வழங்காமல், தி.மு.க.,வே போட்டியிட வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தினர். recommended by
மேலும், கோவையில் உள்ள தொகுதிகளில் ஒன்றில் நீங்களே போட்டியிடுங்கள் என, செந்தில் பாலாஜியிடம் முதல்வர் கூறியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டார். அதில், கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, இம்முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த முறை கோவை தெற்கில் பாஜக போட்டியிட்ட நிலையில், இம்முறை அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார்.