... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
அமெரிக்காவுக்குக் குறி.. அதிநவீன ஏவுகணை இன்ஜின் சோதனை வெற்றி..

அமெரிக்காவுக்குக் குறி.. அதிநவீன ஏவுகணை இன்ஜின் சோதனை வெற்றி.. உற்சாகத்தில் வட கொரியா!

அமெரிக்காவை தாக்கும் திறனுடைய அதிக உந்துவிசை கொண்ட அதி நவீன திட எரிபொருள் ஏவுகணை இன்ஜினை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்திருக்கிறது.

அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். இதனால், தங்களது நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களை அமெரிக்கா செய்துவருவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவையே தாக்கும் திறனுடைய ஏவுகணைக்கான இன்ஜின் சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் குறிப்பானது, அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பைத் தாக்கும் அணு ஆயுதத் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், இந்தப் பரிசோதனை எப்போது, ​​எங்கு நடைபெற்றது என்பதை கே.சி.என்.ஏ. துல்லியமாகத் தெரிவிக்கவில்லை

2019-இல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் கிம் மேற்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததிலிருந்து, வட கொரியா தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்துவதில் அக்கறை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், "அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு. அமெரிக்காவின் ராணுவ கொள்கைகளே உலகின் அமைதியைச் சீர்குலைக்கின்றன. தனது இறையாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிடாது. நாட்டின் பாதுகாப்பிற்கு அணுசக்தி திறன் மிகவும் இன்றியமையாதது” என அவர் தெரிவித்திருந்தார்.

Source : Puthia Thalaimurai

1 hour ago

Home Flash News