பள்ளி சேர்க்கை டூ நீச்சல் பயிற்சி - பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு ராணுவப் பள்ளியில் சேர்க்க இப்போது விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முக்கிய அப்டேட்
Tamil Nadu Government : தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 7 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ராணுவப் பள்ளியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம். இது ஒரு அரிய வாய்ப்பு. அதேபோல், கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
நீச்சல் பயிற்சி வகுப்பு கோடைகால நீச்சல் கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆப, அவர்கள் தகவல். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளுதல் (Learn to Swim) என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புக்கள் ஏப்ரல் 1 ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. (ஒரு பயிற்சி வகுப்புகள் 12 நாள்கள் நடைபெறும்)
இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு குறைந்த பட்சம் 9 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். நீச்சல் பயிற்சி கட்டணம் GST உட்பட ரூ.1770/- செலுத்தி நீச்சல் கற்றுக்கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். முதற்கட்ட நீச்சல் வகுப்பு பயிற்சி முகாம் 01.04.2026 முதல் 16.04.2026 வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் 17.04.2026 முதல் 02.05.2026 வரையும், மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் 03.05.2026 முதல் 16.05.2026 வரையும், நான்காம் கட்ட பயிற்சி முகாம் 17.05.2026 முதல் 31.05.2026 வரையும், ஐந்தாம் கட்ட பயிற்சி முகாம் 02.06.2026 முதல் 14.06.2026 வரையும் நடைபெறவுள்ளது.
இன்றைய இளைஞர் சமுதாயம் பல்வேறு மன அழுத்தம், போட்டிகள் நிறைந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நீச்சல் பயிற்சியானது அவரவர்களின் உடல் வலிமை மற்றும் மன வலிமையை தரக்கூடிய ஒரே பயிற்சி நீச்சல் பயிற்சியாகும். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.