வாஷிங்டன் வருடாந்திர பட்டம் விடும் விழாவில் குவிந்த பார்வையாளர்கள்!'
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள நினைவுச்சின்னம் அருகே செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கியதைத் தொடர்ந்து நடத்தப்படும் வருடாந்திர பட்டம்விடும் திருவிழா பார்வையாளர்களை கவர்ந்தது.
அங்கு குவிந்திருந்த சுற்றுலா பயணிகள், டிராகன் வடிவிலான வண்ணமயமான பட்டங்களை வானில் விட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
வாஷிங்டன் நினைவுச்சின்னம் அருகே செர்ரி மரங்களில் காணப்படும் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்களை பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இந்த செர்ரி மலர் மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் சுற்றுலா பயணிகளை அமெரிக்கத் தலைநகருக்கு ஈர்ப்பது குறிப்பிடத்தக்கது.