... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#பாஜக ஆளும் மாநிலங்களை காட்டிலும் ‘‘ தமிழகம் எல்லா துறைகளிலும் முதலிடம்”

பாஜக ஆளும் மாநிலங்களை காட்டிலும் ‘‘ தமிழகம் எல்லா துறைகளிலும் முதலிடம்” - ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்

சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களை காட்டிலும் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் எல்லாவற்றிலும் முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளன. 2021ம் ஆண்டு திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் இளைஞர்கள், மகளிர் ஆகியோரின் வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.Urban Transit

அவை பின்வருமாறு: தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் முகவர் மாநாடுகள் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில் தொடங்கிட ஊக்கமளிக்கத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி முதலிய பல்வேறு இடங்களில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் முதலிய நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்குத் தேவையான நில வசதிகள், உட்பட அனைத்தையும் திராவிட மாடல் அரசு வழங்கும்; அத்துடன், அறிவும் ஆற்றலும் நிறைந்த கல்வி, தொழில்நுட்பத்தில் சிறந்த மனிதவளமும் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன என்பதை எடுத்துக் கூறி தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவற்றின் பயனாக, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் தொழில் முகவர்களுடன் 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 12.16 லட்சம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளுடன் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. இவற்றின் மூலம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் முதற்கட்டமாக 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் 3,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வின்ஃபாஸ்ட் மின் வாகன தொழில்சாலை, ரூ.1003 கோடியில் பிள்ளைப்பாக்கம் கண்ணாடிப் பொருள்கள் உற்பத்தி தொழில்சாலை, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனத்தின் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை, ரூ. 3250 கோடியில் மீண்டும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஃபோர்டு தொழிற்சாலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 36 லட்சம் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Source : Dinakaran

2 hours ago

Home Flash News