அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பு டிரம்ப் அதிரடி
தேசியப் பாதுகாப்பைக் காரணமாகக் காட்டி, எஃகு, அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்கள் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார். புதிய விதிகளின்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.
ஆனால் அமெரிக்காவிலேயே தங்கள் மருந்துகளை உற்பத்தி செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டும். ஜெனரிக் மருந்துகளுக்கு இந்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல அடிப்படை எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 50 சதவீதமும், அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வழிப்பொருட்களுக்கு 25 சதவீதமும் சுங்கவரி விதிக்கப்படும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.