... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த டி.ஆர்.சண்முகசுந்தரம்..! - சீட் மறுக்கப்பட்டதால் அதிரடி முடிவு..!

திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த டி.ஆர்.சண்முகசுந்தரம்..! - சீட் மறுக்கப்பட்டதால் அதிரடி முடிவு..!

திமுகவிலிருந்து வாய்ப்பு எதிர்பார்த்த டி.ஆர். சண்முகசுந்தரம் (TRS), கட்சி தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்ததை அடுத்து கடும் அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து இன்று மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். டி.ஆர். சண்முகசுந்தரம் தனது ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய தொண்டர்களுடன் மனுத்தாக்கல் அலுவலகத்திற்கு சென்று சுயேட்சையாக போட்டியிடுவதற்கான மனுவை சமர்ப்பித்தார். 
முதலில் திங்கட்கிழமை மனுத்தாக்கல் செய்வதாக திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென இன்று மனுத்தாக்கல் செய்ததால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியில் நீண்டகாலமாக திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த டி.ஆர். சண்முகசுந்தரம், இம்முறை சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்ததால், கடும் ஏமாற்றம் அடைந்து கட்சியை விட்டு வெளியேறினார்.
 இந்த திடீர் நகர்வு மேட்டுப்பாளையம் தொகுதியில் தேர்தல் சூழலை மாற்றியமைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுக கூட்டணி வேட்பாளருக்கு டி.ஆர்.எஸ் சுயேட்சையாக போட்டியிடுவது பெரும் சவாலாக அமையலாம் என்று தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டி.ஆர். சண்முகசுந்தரம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், "மேட்டுப்பாளையம் மக்களுக்காக நான் எப்போதும் உழைத்திருக்கிறேன். கட்சி எனக்கு வாய்ப்பு தரவில்லை என்றாலும், மக்கள் சேவை செய்வதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். மக்கள் ஆதரவோடு இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன்" என்று உறுதியாக தெரிவித்தார்.

Source : Smacy News

1 hour ago

Home Flash News