2,06,000 பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஒபெக் முடிவு
மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக் மே மாதத்திற்கான உற்பத்தி ஒதுக்கீட்டை ஒரு நாளைக்கு 2,06,000 பீப்பாய்கள் அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
சவூதி அரேபியா, ரஷ்யா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கஜகஸ்தான், அல்ஜீரியா மற்றும் ஓமன் ஆகிய எட்டு நாடுகள் கொண்ட ஒபெக்கின் கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 120 டாலராக உயர்ந்துள்ளது. தற்போது ஒபெக் நாடுகள் எடுத்துள்ள முடிவால், எண்ணெய் விநியோகம் அதிகரித்து விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.