... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#“அனிருத் நடிக்க வேண்டிய படம்...” - சுவாரஸ்யம் பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி

“அனிருத் நடிக்க வேண்டிய படம்...” - சுவாரஸ்யம் பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “விக்னேஷ் சிவன் ஒரு லக்கி பாய் தான். நிறைய பேருக்கு அவரை பிடிக்கும். நயன்தாராவுக்கும் பிடிக்கும். நானும் ரௌடி தான் படத்தில் தான் இரண்டு பேரும் கை கோர்த்தார்கள். அதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். என் முன்னால் தான் அந்த காதல் கதை படிப்படியாக டெவலப் ஆனது. முதலில் விக்னேஷ் சிவன், நயன்தாரா அவரை காதலிப்பதாக சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. இதயமே வெடிக்கிற மாதிரி இருந்தது. பின்பு நயன்தாராவிடம் போய் கேட்டேன். அப்போ பார்த்த லவ், இன்னைக்கு வரைக்கும் அதை தொடர்கிறார்.

என்னுடைய எல்கேஜி படத்தில் பிரதீப் ரங்கநாதன் தான் ஒரு டிராஃப்ட் டயலாக் எழுதிக்கொடுத்தார். இப்போது இருக்கும் தமிழ் சினிமாவில் என்னிடம் நீங்க யார் ரசிகர் எனக் கேட்டால், பிரதீப் ரங்கநாதனை சொல்வேன். கருப்பு பட பணியில் இரண்டு வருஷமாக இருந்த போது ரஜினி, விஜய் என நிறைய நடிகர்களின் படங்கள் வந்தது. அவர்கள் படங்களுக்கு ஒரே டீமாக போக ஆசைப்படுவது போல் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்துக்கும் ஆசை வந்தது. அவர் நிறைய இளைஞர்களை கவர்ந்திருக்கிறார். ரொம்ப காலத்துக்கு அவர் ஒரு ஸ்டாராகவே இருப்பார்.

தொடர்ந்து 'கருப்பு' படம் குறித்து பேசிய அவர், “விக்னேஷ் சிவன் பி.இ. பன்னியிருப்பது போல் நான் மூன்று வருஷ கோர்ஸ் பி.எஸ்சி பண்ணியிருக்கேன். படம் நன்றாக வந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டிற்குள் படத்தின் அடுத்த பாடல் வெளியாகும்” என்றார்.

Source : Nakkeeran

1 hour ago

Home Flash News