Select Location
All Locations
State
Region
City / District
வாக்களிக்கச் செல்ல 10,663 பேருந்துகள்! ஏப்ரல் 21 முதல் சிறப்பு பேருந்து இயக்கம் - தமிழக அரசு அதிரடி..!

வாக்களிக்கச் செல்ல 10,663 பேருந்துகள்! ஏப்ரல் 21 முதல் சிறப்பு பேருந்து இயக்கம் - தமிழக அரசு அதிரடி..!

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்.21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சேர்த்து 10,663 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 21.04.2026 முதல் 23.04.2026 (நண்பகல் 01.00 மணி) வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் இணைந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பயண வழித்தடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள்

சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்தைப் பொறுத்து பின்வரும் பேருந்து நிலையங்களைப் பயன்படுத்தலாம்:

கிளாம்பாக்கம் (KCBT) - புறநகர் பேருந்து நிலையம்:

திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

கிளாம்பாக்கம் (KCBT) - மாநகர பேருந்து நிலையம் (MTC):

திருவண்ணாமலை, போளூர் மற்றும் வந்தவாசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு (CMBT):

காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர், திருத்தணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகள்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்:

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் வழக்கமான பேருந்துகள

முன்பதிவு: பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in அல்லது TNSTC Official App மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை: பேருந்து இயக்கம் குறித்த புகார்கள் அல்லது தகவல்களுக்கு 94450 14436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன


Smacy News 1 hour ago
Home Flash News