Select Location
All Locations
State
Region
City / District
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு..!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வு அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உடனடி தலையீட்டை தீர்வு காண கோரிக்கை வைத்து கடிதம் எழுதின.

இந்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 2 சதவீதம் உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடைசியாக அக்டோபர் மாதம் திருத்தப்பட்டபோது, அது 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


Smacy News 1 hour ago
Home Flash News