Select Location
All Locations
State
Region
City / District
விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு, இன்று செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சசிகலா முன்பு 4-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதம் 15-ந்தேதிக்கு நீதிபதி சசிகலா ஒத்திவைத்தார்.

முன்னதாக, சங்கீதா தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 26 அன்று முதன்முறையாக விசாரணைக்கு வந்த இவ்வழக்கு, பின்னர் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு அதாவது தேர்தலுக்குச் சரியாக 3 நாட்களுக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Malaimalar 1 hour ago
Home Flash News