Select Location
All Locations
State
Region
City / District
சி.ஆர்.பி.எஃப் வேலை வாய்ப்பு; தமிழகத்திலும் பணி; 9195 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சி.ஆர்.பி.எஃப் வேலை வாய்ப்பு; தமிழகத்திலும் பணி; 9195 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்கள்: 9195 பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காக்கிச்சட்டை போட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாடு முழுவதும் மொத்தம் 9195 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 681 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.05.2026க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 9195 ஆண்கள் – 9116, பெண்கள் - 79 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 21 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 21,700- 69,100 வயது வரம்பு தளர்வு: எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு


24 News 1 hour ago
Home Flash News