Select Location
All Locations
State
Region
City / District
மிஸ் திருநங்கை 2026 போட்டி சென்னைக்கு முதல் மூன்று இடங்கள்

மிஸ் திருநங்கை 2026 போட்டி சென்னைக்கு முதல் மூன்று இடங்கள் 

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கை 2026 போட்டியில் சென்னையை சேர்ந் ஓமனா முதலிடமும், சாய் 2ம் இடமும், ஸ்விகி 3ம் இடமும் பெற்றனர். விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி சென்னை திருநங்கை நாயக்குகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா 2026 கலைநிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதனையடுத்து மிஸ் திருநங்கை 2026 போட்டி நடந்தது. இதில் 100 திருநங்கைகள் கலந்து கொண்டனர். நடை, உடை, நடனம், பொதுஅறிவு உள்ளிட்ட திறமைகள் அடிப்படையில் முதல் சுற்றில் 12 திருநங்கைகளும், அடுத்தடுத்த சுற்றுகள் என 5 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நிறைவாக 3 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு, மிஸ் திருநங்கை 2026 கிரீடம் சூட்டி பாராட்டினர். இதில் சென்னை ஓமனா முதலிடம் பெற்றார். சென்னை சாய் 2ம் இடமும், சென்னை ஸ்விகி 3ம் இடமும் பெற்றனர். முதல் பரிசாக ரூ.25,000 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.15,000 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.10,000 ஆயிரம் வழங்கப்பட்டது.


Dinakaran 1 day ago
Home Flash News