Select Location
All Locations
State
Region
City / District
இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் - தவெக தலைவர் விஜய் சந்திப்பு.

இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் - தவெக தலைவர் விஜய் சந்திப்பு.

இன்று நண்பகல் சென்னை வருகிறார் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லெக்கர் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், கேரள மாநில கவர்னரும், தமிழக பொறுப்பு கவர்னருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று நண்பகல் சென்னை வர உள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான பணிகளை கவர்னர் மேற்கொள்ள உள்ளார் recommended by

அதே சமயம், தமிழகத்தில் த.வெ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகளை அக்கட்சி பெறவில்லை. இந்த சூழலில், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொறுப்பு கவர்னர் அர்லேகர் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், இன்று மாலை மக்கள்பவனில் நேரில் சந்தித்துஎம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Smacy News 59 minutes ago
Home Flash News