Select Location
All Locations
State
Region
City / District
"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது.

இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் த.வெ.க சிக்கலில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் த.வெ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே த.வெ.க தலைவர் விஜய் நேற்று (மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.

பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் இன்று நடைபெற இருந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், " 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை காண்பித்துவிட்டு பதவியேற்புக்கு வாருங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது.

த.வெ.க தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியாக த.வெ.கவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எனவே விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார். Payda


Vikatan 53 minutes ago
Home Flash News