Select Location
All Locations
State
Region
City / District
தமிழக கோ-ஆப்டெக்ஸில் இருந்து ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு

தமிழக கோ-ஆப்டெக்ஸில் இருந்து ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு

திருமலை: தமிழ்​நாட்​டின் கோ - ஆப் டெக்​ஸில் இருந்து திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பட்டு வஸ்​திரங்​கள் வாங்க திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழுக் கூட்​டத்​தில் முடிவு செய்யப்பட்​டுள்​ளது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் நேற்று அறங்​காவலர் குழுக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் 86 அம்​சங்​கள் குறித்து விவா​திக்​கப்​பட்​டது. அதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அறங்​காவலர் குழுத்தலை​வர் பிஆர் நாயுடு செய்தியாளர்களிடம் கூறிய​தாவது:

திரு​மலை​யில் தண்​ணீர் வீணாவதை தடுக்​கும் வித​மாக கோகர்பம் அணை​யில் இருந்து ஃபில்​டர் பாயின்ட் வரை 2 கி.மீ தூரத்​துக்கு ரூ.6 கோடி செல​வில் பைப் லைன் அமைக்​கப்​படும். ஆப்கோ மற்​றும் கோ ஆப்​டெக்ஸ் மூலம் பட்டு வஸ்​திரங்​கள், போர்​வை​கள் ஆகியவற்றை ரூ.44.20 கோடிக்கு வாங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கோவை பேரூர் தாலுகா செட்​டி​பாளை​யம் பகு​தி​யில் ஜி-ஸ்​கொயர் ரியல்​டர் பிரைவேட் லிமிடெட் நிறு​வனத்​தார் திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு 19.43 ஏக்​கர் நிலத்தை பத்​திரப் பதிவு செய்து கொடுத்​துள்​ளனர். இதனை தேவஸ்​தான அசையா சொத்​து​கள் பதிவேட்​டில் சேர்க்க அறங்​காவலர் குழுக் கூட்​டத்​தில் முடிவு செய்யப்​பட்​டுள்​ளது.

மும்​பை​யில் பத்​மாவதி தாயார் கோயில் கட்ட தேவை​யான நிதி​யை அளிக்க அறங்​காவலர் குழு உறுப்​பினர் சவுரப் போரா முன்​வந்​துள்​ளார். திருப்​பதி அலிபிரி​யில் ரூ.4.75 கோடி செல​வில் நிரந்தர யாக சாலை அமைக்​கப்​படும். திரு​மலை​யில் உள்ள சாலைகள், சர்​க்கிள்​களுக்கு சுவாமி பெயர்​கள் சூட்​டப்​படும். இவ்​வாறு பிஆர் நாயுடு கூறி​னார். இக்​கூட்​டத்​தில் நிர்​வாக அதி​காரி எம்.ரவிச்சந்​தி​ரா, கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி மற்​றும் தேவஸ்​தான உயர் அதி​காரி​கள், அறங்​காவலர் குழு உறுப்​பினர்​கள் பலர் பங்​கேற்​றனர்​.


Hindu Tamil 59 minutes ago
Home Flash News