Select Location
All Locations
State
Region
City / District
அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவிப்பு

அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 181 அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் சேர இன்றுமுதல் மாணவர்​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். இது தொடர்​பாக கல்​லூரிக் கல்வி ஆணை​யர் இ.சுந்​தர​வல்லி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் 2026-27-ம் கல்வி ஆண்​டில் இளங்​கலை பட்​டப் படிப்பு முதலாம் ஆண்​டில் சேர மாணவர்​களிடம் இருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. இதற்கு www.tngasa.in என்ற இணை​யதளத்​தில் மே 7 (இன்​று) முதல் 29-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். இணை​யதள வசதி இல்​லாத மாணவர்​கள் விண்​ணப்​பிக்க ஏது​வாக, அனைத்து அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களி​லும் சேர்க்கை உதவி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

விண்​ணப்​பக் கட்​ட​ணம் மற்​றும் பதிவுக் கட்​ட​ணம் ரூ.50. எஸ்​சி, எஸ்டி மாணவர்​கள் விண்​ணப்​பக் கட்​ட​ணம் (ரூ.48) செலுத்த தேவை​யில்லை. பதிவுக் கட்​ட​ணம் ரூ.2 மட்​டும் செலுத்​தி​னால் போதும். கட்​ட​ணங்​களை டெபிட் கார்​டு, கிரெடிட் கார்​டு, நெட் பேங்​கிங், யுபிஐ மூலம் ஆன்​லைனில் செலுத்​தலாம். தமிழகம் முழு​வதும் மொத்​தம் உள்ள 181 அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் 159 பாடப் பிரிவு​களில் 1.27 லட்​சம் இடங்​கள் உள்​ளன. மாணவர்​கள் தாங்​கள் விரும்​பும் கல்​லூரி​யில் விருப்​பப்​பட்ட பாடப் பிரிவு​களுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். இவ்வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது. அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவிப்பு


Hindu Tamil 58 minutes ago
Home Flash News