ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம்- நிர்மல்குமார்
சட்டப்படி ஆளுநர் நடப்பார் என நம்புகிறோம் என தவெக நிர்வாகி நிர்மல்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரி, அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) அலுவலகங்களுக்கு நேரில் சென்று மாநிலச் செயலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், “NDA கூட்டணியில் எந்த கட்சியின் ஆதரவையும் தவெக கோரவில்லை. விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்குதான் அழைப்பு விடுத்துள்ளோம். ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம். ஆளுநர் அழைப்பு விடுப்பதற்காக காத்திருக்கிறோம், பொறுத்திருந்து பார்ப்போம். ஆளுநர் அரசமைப்பு சட்டப்படி நடப்பார் என்று நம்புகிறோம், இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் . சட்டப்படி ஆட்சி அமைக்க தவெகவை ஆளுநர் அழைக்க வேண்டும். விசிக, ஐயுஎம்எல் இடம் ஆதரவு கேட்டுள்ளோம். அவர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அனைவருக்கும் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்பதே விஜய்யின் நிலைப்பாடு. காவல்துறை பாதுகாப்பு வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டதால் திரும்பபெறப்பட்டது” என்றார்