Select Location
All Locations
State
Region
City / District
திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கரூர், திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மே 14ஆம் தேதியும், கரூர் மாவட்டத்திற்கு மேல் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய இரு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்திற்கு மே 27ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து பகுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மே மாதம் 27ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எளிதாக வந்து தரிசனம் செய்யும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவையொட்டி, மே 14ஆம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலப் பணிகளை கவனிக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் கருவூலங்கள் குறைந்தபட்ம் பணியாளர்களுடன் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களின் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மே மாதத்தில் ஏதாவது ஒருநாள் வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதியை இன்னும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கவில்லை. திருச்சி, கரூர் மாவட்டத்திற்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Smacy News 1 hour ago
Home Flash News