Select Location
All Locations
State
Region
City / District
“தங்கம் வாங்காதீர், வீட்டில் இருந்து வேலை செய்வீர் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கை அரசின் தோல்விக்கான சான்று” - ராகுல்

“தங்கம் வாங்காதீர், வீட்டில் இருந்து வேலை செய்வீர் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கை அரசின் தோல்விக்கான சான்று” - ராகுல்

புதுடெல்லி: தங்​கம் வாங்​காதீர், வீட்​டிலிருந்து வேலை செய்ய அனு​ம​தி​யுங்​கள் என்பன உள்​ளிட்ட பிரதமர் மோடி​யின் கோரிக்கை தோல்விக்​கான சான்று என்று மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​கள் சில தியாகங்​களை செய்ய வேண்​டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்​துள்​ளார்.

தங்​கம் வாங்​காதீர்​கள், வெளி​நாடு செல்லாதீர்​கள், பெட்​ரோலை குறை​வாகப் பயன்​படுத்​துங்​கள், உரம் மற்​றும் சமையல் எண்​ணெய் பயன்​பாட்​டைக் குறைத்​துக் கொள்​ளுங்​கள், மெட்​ரோவைப் பயன்​படுத்​துங்​கள், வீட்​டிலிருந்தே வேலை செய்​யுங்​கள் என அவர் வலி​யுறுத்தி உள்​ளார். இவை வெறும் போதனை​கள் அல்ல, மத்திய அரசின் தோல்விக்​கான சான்​று. கடந்த 12 ஆண்​டு​களில் அவர் நாட்டை இத்​தகைய நிலைக்​குக் கொண்டு வந்​துள்​ளார். இப்​போது மக்​களிடம் எதை வாங்க வேண்டும், எதை வாங்​கக்​கூ​டாது, எங்கே செல்ல வேண்​டும், எங்கே செல்​லக்​கூ​டாது என்று சொல்ல வேண்​டி​யிருக்​கிறது. ஒவ்வொரு முறை​யும், அவர்​கள் பிரச்​சினைக்கு பொறுப்பு ஏற்பதற்கு பதில் அதிலிருந்து தப்​பிப்​ப​தற்​காகப் பொறுப்பை மக்கள் மீது மாற்​றுகிறார்​கள். இவ்​வாறு மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறி​யுள்​ளார்.


Hindu Tamil 50 minutes ago
Home Flash News