Select Location
All Locations
State
Region
City / District
இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை..!

இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை..!

சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் சர்க்கரை இருப்பை உறுதி செய்ய சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30 வரை தடை விதிப்பதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி குறைவால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவையை முன்னுரிமையாகக் கருதி, சர்க்கரை ஏற்றுமதி தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதி தடைசெய்யப்பட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுக்கான சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை பொருந்தாது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாக இந்தியா இருந்து வருகிறது.


Smacy News 1 hour ago
Home Flash News