Select Location
All Locations
State
Region
City / District
ஜொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!!

ஜொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!!

நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை, 4 ஆண்டுக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக லிட்டருக்கு டீசல் விலை, 3.11 ரூபாய், பெட்ரோல், 3.14 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தங்களை நிதி நெருக்கடிக்கு தள்ளுவதாக ஸ்விகி, ஸொமேட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா போன்ற தளங்களில் பணி புரியும் ஊழியர்கள் இன்று (மே 16) பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரைவேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து கிக் மற்றும் பிளாட்பார்ம் சேவைத் தொழிலாளர் சங்கம் (GIPSWU) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்ற சலுகைகள் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி, ஸொமேட்டோவில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் இன்று மதியம் 12 மணி முதல் 5 மணி வரையில் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்டு ஸ்ட்ரைக்கில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Smacy News 56 minutes ago
Home Flash News