Select Location
All Locations
State
Region
City / District
என் குடும்பத்தை கெடுத்ததே 'அந்த' 3 எழுத்து நடிகைதான்..! - ஜெயம் ரவி வைத்த பகீர் குற்றச்சாட்டு!

என் குடும்பத்தை கெடுத்ததே 'அந்த' 3 எழுத்து நடிகைதான்..! - ஜெயம் ரவி வைத்த பகீர் குற்றச்சாட்டு!

நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. சாது மிரண்டால் காடுகொள்ளாது.சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். "எனது பிள்ளைகளை பார்க்க என்னை அனுமதிக்க வில்லை. என்னை சீண்டி பார்க்காதீர்கள். இனி நான் சாது கிடையாது. விவாகரத்து கிடைக்கும் வரை படத்தில் நடிக்க போவதில்லை. என்னால் நடிக்க முடியவில்லை; எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்க முடியவில்லை. இதுவரை நடித்த படங்களையும் வெளியிடப் போவதில்லை. இப்ப என்னை நானே வருத்திக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்களுக்கு இதுதான் வேணும். அவங்களுக்கு நான் உயிரோட இருக்க கூடாது. ஆனா, நான் எல்லாரையும் முடிச்சிட்டுதான் போவேன். சிரிச்சிட்டே போவேன்" என்று கூறியுள்ளார்.

தனக்கு நடந்தது ஒரு பிளாக் மெயில் திருமணம் என்று அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கையை அறுத்துக்கொண்டு தன்னை மிரட்டியே அந்தத் திருமணம் நடத்தப்பட்டதாகவும், ஒரே நாளில் தன்னால் விவாகரத்து பெற்றிருக்க முடியும் என்றாலும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே இத்தனை காலம் அமைதி காத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், "மூன்றெழுத்து இட்லி நடிகை" ஒருவரே தனது குடும்பத்தை முழுமையாக கெடுத்தார் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தற்போது ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் வீடியோக்களை எடிட் செய்து தனக்கு எதிராகப் பரப்பி வருவதாகவும், இத்தகைய சைபர் துன்புறுத்தல்களால் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறையில் தன் மீது எந்தவொரு கருப்புப்புள்ளியும் இல்லை என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள ரவி மோகன், ஏற்கனவே தன் மீது பல கோடி கடன்களும் வழக்குகளும் இருந்தபோதிலும் தான் எப்போதும் சிரித்தபடியே அனைத்தையும் எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார். ஆனால், தற்போது தனது சொந்தப் பிள்ளைகளைத் தன்னை பார்க்க விடுவதில்லை என்றும், பாதுகாவலர்களுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். "பாசத்தைப் பற்றி என்னிடம் யாரும் பேசாதீர்கள்" என குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தால் தன்னைத்தானே வருத்திக்கொள்வதாகவும், மன உளைச்சலால் தன்னால் தற்போதைய சூழலில் திரைப்பட வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் உருக்கமாகக் கூறியுள்ளார்.


Smacy News 56 minutes ago
Home Flash News