Select Location
All Locations
State
Region
City / District
LIVE
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குண்டுகள் தயாரிப்பு

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குண்டுகள் தயாரிப்பு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்புக்கு செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தியுள்ளனர் என்று தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) தெரி​வித்​துள்​ளது. டெல்​லி​யில் செங்​கோட்டை அருகே கடந்​தாண்டு நவம்​பர் மாதம் கார் குண்டு வெடித்​த​தில் 11 பேர் உயி​ரிழந்​தனர், இதுதொடர்​பாக என்ஐஏ 7,500 பக்க குற்​றப்பத்​திரி​கையை டெல்​லி​ சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த 14-ம் தேதி தாக்​கல் செய்​தது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கார் குண்டுவெடிப்பில் உயி​ரிழந்த மருத்​து​வர் உமர் முகமது​வுக்​கு, ஜசிர் பிலால் வானி என்​பவரை மருத்​து​வர் அடீல் அகமது அறி​முகம் செய்து வைத்​துள்​ளார். இவர் வெடிகுண்​டு​கள் தயாரிக்கும் தொழில்​ உதவி​களை அளித்​துள்​ளார்.அவர் தயாரித்த கார் வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கலாம். இவர் அல்​-​கொய்​தாவுடன் தொடர்​புடைய ‘அன்​சார் கஸ்​வத்​-உல்​-ஹிந்த்' என்ற இயக்​கத்தை சேர்ந்​தவர்.

இவரும் அல்​-ஃபலா பல்​கலைக்​கழகத்​தில் பல முறை தங்கி வெடிகுண்​டு​கள் தயாரிப்​ப​தற்​கான தொழில்​நுட்​பத்தை வழங்​கி​யுள்​ளார். வெடிகுண்​டு​கள் தயாரிப்​ப​தற்​கான மூலப் பொருட்​களை மருத்​து​வர் அடீல் அகமது, ஜசிர் பிலால் வானிக்கு வாங்கி கொடுத்​துள்​ளார். மருத்​து​வர் உமர், ராக்​கெட் குண்​டு​கள் குறித்து ஆய்வு செய்து அதன் வழி​காட்​டு​தல்​களை வழங்​கி​யுள்​ளார். ராக்​கெட் குண்​டு​கள் தயாரிப்​பது எப்​படி மற்​றும் அதன் வெடிமருந்து கலவை என்ன விகிதத்​தில் இருக்க வேண்​டும் என்று யூடியூப் மற்​றும் சாட்​ஜிபிடி-ல் ஜசிர் தேடி விவரங்​களை சேகரித்​துள்​ளார்.

இந்த தீவிர​வாத கும்​பல் வெடிகுண்​டு​கள் தயாரிக்க ஏஐ தளங்​களை தவறாக பயன்​படுத்​தி​யுள்​ளது. இவர்​கள் தயாரித்த ராக்​கெட் குண்​டு​கள், ஜம்​மு-​காஷ்மீரின் அனந்​த​நாக் மாவட்​டத்​தில் உள்ள காசிகுண்ட் வனப்​பகு​தி​யில் சோதித்து பார்த்​துள்​ளனர். இவர்​களின் ஆயுதங்​கள் கிட்​டத்​தட்ட தொழிற்​சாலை​யில் தயாரிக்​கப்​பட்ட ஆயுதங்​களை போல் மிக நுணுக்​க​மாக உள்​ளன. விரி​வான அறி​வியல் மற்​றும் தடய​வியல் ஆய்வு மற்​றும் புலன் வி​சா​ரணை மூலம் தீவிர​வா​தி​களின் மிகப் பெரிய சதி வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இவ்​வாறு என்​ஐஏ தெரி​வித்​துள்​ளது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News