சென்னை: அதிமுக சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏ-க்களான மூவர், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமைச்செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் முன்னிலையில் தவெக-வில் இணைந்திருப்பது 100% குதிரைபேரம் தான் என்று அதிமுக விமர்சித்து உள்ளது.
இதுதொடர்பாக பேசி இருக்கும் அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குதிரை பேரத்தை ஊரறிய, நாடறிய இவ்வளவு வெளிப்படையாக செய்யும் ஒரு அரசை, சுதந்திர இந்தியா இதுவரை பார்த்ததே இல்லை என்று குறிப்பிட்டார். சொல்ல போனால் இது குதிரை பேரம் அல்ல; யானை பேரம் என்று தான் சொல்ல வேண்டும் என்று ஆதங்கம் தெரிவித்து உள்ளார். மேலும் பதவியேற்ற வெறும் 15 நாட்களிலேயே அதிகாரம், தவெக-வின் கண்ணை மறைத்திருக்கிறது. நிச்சயமாக துரோகம் செய்கிறவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
LIVE