பிஎப் போர்ட்டலில் ஆதார் - பான் கார்டு விவரங்களில் வேறுபாடு இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் தங்களின் Universal Account Number - UAN கணக்குடன் அடையாள ஆவணங்களை இணைப்பதே கேஒய்சி எனப்படும். இபிஎப்ஓ (EPFO) அமைப்பு கணக்குதாரரின் விவரங்களை டிஜிட்டல் முறையில் துல்லியமாகச் சரிபார்க்க இந்த ஆவணங்கள் உதவுகின்றன. பொதுவாக ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இதில் அடங்கும். இவற்றுள் ஆதார், பான் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆன்லைன் மூலமாக பணம் எடுப்பதற்கும், கணக்கை மாற்றுவதற்கும் மிக முக்கியமானவையாகும்.
LIVE