லீடர் ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லீடர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்திருந்த லெஜண்ட் திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் கூட்டணியில் லெஜண்ட் சரவணன் லீடர் படத்தின் நடித்திருந்தார். இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபிலேயே 2 கோடி பார்வைகளைக் கடந்தது.
முழு ஆக்சன் திரைப்படமாக உருவான லீடர் திரைப்படம், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், லீடர் திரைப்படம் வரும் மே 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.