Select Location
All Locations
State
Region
City / District
ஐபிஎல் 2026: வைபவ் சூர்யவன்ஷி சாதனை! அதிக ரன்கள் குவித்த டாப் - 5 பேட்டர்கள்!

ஐபிஎல் 2026: வைபவ் சூர்யவன்ஷி சாதனை! அதிக ரன்கள் குவித்த டாப் - 5 பேட்டர்கள்!

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆர்ஞ்சு கேப் வென்ற மிக இளம் வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஆர்சிபி அணி சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த நிலையில், ஐபிஎல் 2026 தொடர் முழுவதும் அதிக ரன்கள் குவித்து ஆர்ஞ்சு கேப்பை வைபவ் சூர்யவன்ஷி (776 ரன்கள்) வென்றுள்ளார். மேலும், சூப்பர் ஸ்டிரைக்கர் விருதையும் வென்றுள்ளார். இதுமட்டுமின்றி, அதிக சிக்ஸர்கள் (72) வீரர், இந்த சீசனில் அதிவேக சதம் (36 பந்துகளில்) அடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

அதிக ரன்கள்

1. வைபவ் சூர்யவன்ஷி (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 776 ரன்கள்
2. ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) - 732 ரன்கள்
3. சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 722 ரன்கள்
4. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 675 ரன்கள்
5. ஹென்ரிச் கிளாசென் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 624 ரன்கள்மேலும், இந்த சீசனில் அதிகர் ஃபோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் (75) முதலிடத்தில் உள்ளார்.


Dinamani 1 hour ago
Home Flash News