Select Location
All Locations
State
Region
City / District
"என்றும் நேர்மையுடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே முதல்வர் விஜயின் உத்தரவு" - அமைச்சர் ஆனந்த்

"என்றும் நேர்மையுடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே முதல்வர் விஜயின் உத்தரவு" - அமைச்சர் ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆனந்த், “என் தொகுதியில் மக்கள் எனக்கு யாரும் ஓட்டு போடவில்லை. முதல்வர் விஜய் அவர்களுக்காகத்தான் எனக்கு ஓட்டு போட்டார்கள், மக்களுக்காக சேவையாற்ற நாங்கள் இருக்கிறோம். நான் அமைச்சராக இருந்தாலும் விஜய்யின் தொண்டன். தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெகவிற்கு கிடைத்த வாக்குகள் தலைவர் விஜய்க்கு கிடைத்த வாக்குகள்.. என்றும் நேர்மையுடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே முதல்வர் விஜயின் உத்தரவு” என்றார்


Smacy News 1 hour ago
Home Flash News