Select Location
All Locations
State
Region
City / District
கணினி வழி நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

கணினி வழி நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: மருத்துவ கல்வி இளநிலை நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் தேர்வு எழுதி இருந்த நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு தேசிய தேர்வு முகமையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மறுதேர்வு இந்த மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் 21ம் தேதி நடைபெற் இருக்கும் நீட் மறுதேர்வை கணினி வழியில் நடத்த வேண்டும் எனவும், இதுகுறித்த உத்தரவை தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவாக பிறப்பிக்க வேண்டுன் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் சிங் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே நீட் தேர்வை நடத்தும் அலுவலர்கள் நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் இந்த கோரிக்கை என்பது விசாரணைக்கு உகந்தது கிடையாது. இதே கோரிக்கைகள் கொண்ட மனுக்களை முன்னதாக உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்று விளக்கமளித்த நீதிபதிகள், நீட் தேர்வு தொடர்பான பிற கோரிக்கைகள் அடங்கிய அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.


Dinakaran 1 hour ago
Home Flash News