Select Location
All Locations
State
Region
City / District
உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மேடைகளிலும் முதலமைச்சர் விஜய்யை ஆவேசமாகச் சாடி வருகின்றனர். சமீபத்தில் திருச்சி கிழக்கு தொகுதி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுக்கு, உதயநிதி ஸ்டாலின் கவுண்டர் கொடுத்துப் பேசியிருந்தார். இந்நிலையில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார்.

தவெகவின் வெற்றி என்பது தமிழ்நாடு பெண்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றி. அந்த வெற்றியை நீங்கள் கொச்சைப்படுத்தினால் பெண்களை கொச்சைப்படுத்துவதாக அர்த்தம். எனவே தான் அதற்கு பதில் தர வேண்டும் என விரும்பினேன். முக ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கவர்ச்சியால் இந்த வெற்றி வந்தது என்கின்றனர். முக ஸ்டாலின் அவர்கள் கவர்ச்சிக்காக தானே உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் நடிக்க வைத்தார். கவர்ச்சி வந்ததா ?படிப்பும் வரவில்லை, சினிமாவும் வரவில்லை கடைசியில் அரசியலும் வரவில்லை. தவெகவின் இந்த வெற்றி ஏன் வரலாறு வெற்றியாக இருக்கிறது தெரியுமா ? திமுக என்ற கட்சி பல தோல்விகளை சந்தித்துள்ளது. ஆனால் எப்போதும் திமுகவின் தலைவர் தோல்வியை சந்தித்தது கிடையாது. கலைஞர் ஒருபோதும் தோற்றது கிடையாது. ஆனால் முக ஸ்டாலின் தோல்வியை சந்தித்துவிட்டார் என பேசி திமுகவிற்கு பதிலடி கொடுத்தார் ஆதவ் அர்ஜுனா.

 அதுமட்டுமல்லாமல் முக ஸ்டாலின் மட்டும் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய்யின் பரப்புரைக்கு முறையாக அனுமதி கொடுத்திருந்தால் 59 தொகுதியில் திமுக டெபாசிட் இழந்திருக்கும். மேலும் அவர் பேசியதாவது, உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் இடத்தை ஜெயித்து காட்டுங்கள்.உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.சென்னையில் திமுக ஒரு வார்டில் கூட டெபாசிட் வாங்காது.தவெகவின் மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக மேயர்கள் ஒத்துழைப்பதில்லை.அடிப்படை பணிகளை கூட செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜூனா, "எந்த அமைச்சரும் 1 ரூபா காசு வாங்கல.. தைரியம் இருந்தா நிரூபிச்சு காட்டுங்க... ஆனா உங்களால இத பண்ண முடியுமா? சட்ட சபைக்கு வாங்க வெயிட் பண்றோம்.. நீங்க என்ன பேசுறீங்கன்னு பாக்குறோம்..." என பேசினார்.


Smacy News 1 hour ago
Home Flash News