Select Location
All Locations
State
Region
City / District
இனி மொபைல் செயலியில் சொத்து வில்லங்கம் பார்க்கலாம் - பதிவுத்துறை நடவடிக்கை

இனி மொபைல் செயலியில் சொத்து வில்லங்கம் பார்க்கலாம் - பதிவுத்துறை நடவடிக்கை

தமிழகத்தில், வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும்போது, அது தொடர்பான முந்தைய பத்திரப்பதிவு விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக, சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்க சான்றிதழ் பெறப் படுகிறது. இதில் கட்டணம் செலுத்தி, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்து, வில்லங்க சான்றிதழ் பெறப்பட்டு வந்தது. பதிவுத்துறையின் இணையதளத்தில், இந்த வசதியை பொது மக்கள் இலவசமாக பெற்று வந்தனர்.

இந்நிலையில், 'ஸ்டார் 3.0' மென்பொருள், பதிவுத்துறையில் ஜன., 22ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, 'TNREGINET' என்ற பெயரில், புதிய மொபைல் போன் செயலி தொடங்கப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, இந்த செயலி பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், பதிவுத்துறை அதிகாரிகள் இதை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, பதிவுத் துறை யின் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க விபரங்களை, பொது மக்கள் எளிதாக பார்க்கலாம் என, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய நிலவரப்படி, 1975ம் ஆண்டு முதல் பதிவான பத்திரங்கள் தொடர்பான விபரங்களை, பொது மக்கள் மொபைல் போன் செயலி வாயிலாக பார்க்கலாம் என்றும் அதிகாரிகள் தெரி வித்தனர்.


Smacy News 1 hour ago
Home Flash News