Select Location
All Locations
State
Region
City / District
திமுக தலைமை அதிரடி முடிவு

திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்! இனி தனித்துப்போட்டிதான்... திமுக தலைமை அதிரடி முடிவு

திமுக மாவட்ட செயலாளர்கள் கீழ் உள்ள தொகுதி எண்ணிக்கையை குறைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர்கள் கீழ் உள்ள தொகுதி எண்ணிக்கையை குறைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. தற்போது திமுக மாவட்ட செயலாளர்கள் கீழ் 2 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இனி கூட்டணி வேண்டாம்.. தனித்து போட்டியிட வேண்டும் எனவும் பெரும்பாலானோர் கருத்து கூறியுள்ளனர்.

கட்சியில் அமைப்புரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில், தற்போதுள்ள 78 மாவட்ட செயலர்களின் எண்ணிக்கையை 115-ஆக உயர்த்தவும், கட்சிப் பதவிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி கள ஆய்வு அறிக்கை தலைமைக்கு சமர்பிக்கப்பட்டதும் சில மாவட்ட செயலாளர்களை மாற்றவும், கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டுவரவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Smacy News 1 hour ago
Home Flash News