பிரபல YouTuber முக்தார் கைது
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த, பா.ஜ., பிரமுகர் அலிஷா அப்துல்லா என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பெண்ணின் கண்ணியம் மற்றும் தனியுரிமை குறித்து அவதுாறாக பேசியதுடன், வெளியில் சொல்ல முடியாத வகையில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர் என அலிஷா அப்துல்லா குற்றம் சாட்டி இருந்தார்.இந்த வழக்கில், திமுக எம்பி., திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை முதலில் கைது செய்த போலீசார், தற்போது கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்துள்ளனர்.
முக்தார் அகமது திமுக ஆதரவாளர். திமுகவுக்கு எதிராக பேசியவர்களை தாறுமாறாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்து வந்தார்.இப்போது ஆட்சி மாறிய நிலையில் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார். அலிஷா அப்துல்லா கூறுகையில், "நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தேன். அப்போது முக்தாரும், திருச்சி சூர்யாவும் என்னை பற்றி அவதூறாக பேசினார்கள். குரைக்கும் நாய் கடிக்காது என்பதுபோல் நான் விட்டுவிட்டேன். ஆனால் கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். அதில் எனக்கு பிறந்த 2 இரட்டை குழந்தைகள் பற்றி பேசினார்கள்.ஒரு குழந்தை என்னுடைய முகத்தில் இருப்பது போன்றும், இன்னொரு குழந்தை அண்ணாமலை மாதிரி இருப்பதும் போன்றும் புகைப்படத்தை வைத்து பதிவிட்டனர். இதையடுத்து திருச்சி சூர்யா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அலிஷா அப்துல்லா கொடுத்த புகாரில் பிரபல யூடியூபர் முக்தார் கைதுசெய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் வைத்து முக்தாரை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.