Select Location
All Locations
State
Region
City / District
வெறும் ரூ.1,650 தான்.. திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம்.. ஐஆர்சிடிசி சூப்பர் பேக்கேஜ்

வெறும் ரூ.1,650 தான்.. திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம்.. ஐஆர்சிடிசி சூப்பர் பேக்கேஜ்

IRCTC Tirupati Tour Package Chennai: திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ரூ.300 தரிசன டிக்கெட், விஐபி டிக்கெட் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால், எல்லாருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை. பலராலும் இன்று வரை திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில், திருப்பதிக்கு சுலபமாக செல்லும் வகையில், ஐஆர்சிடிசி சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா தொகுப்பை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. ரயிலுக்கு பதிலாக, சென்னையில் இருந்து ஏசி பேருந்து மூலம் திருப்பதிக்கு செல்ல ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள தி.நகர் வெங்கட்நாரயணன் திருப்பதி கோயில், சைதாப்பேட், கிண்டி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

தினமும் காலை 5 மணிக்கு பேருந்து புறப்படும். சரியாக காலை 8.30 மணிக்குள் திருப்பதிக்கு சென்றடைவீர்கள். அங்கு ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துவிட்டு, திருமலைக்கு செல்வீர்கள். மதிய நேரத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வீர்கள். ஐஆர்சிடிசி இந்த பேக்கேஜ் மூலம் ரூ.300 தரிசன டிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இதற்காக தனியாக தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஐஆர்சிடிசி பேக்கேஜ் மூலம் சுலபமாக ஏழுமலையானை தரிசிக்கலாம். ஏழுமலையான் தரிசனம் முடிந்தவுடன் ஒவ்வொரு நபரும் தலா ஒரு லட்டு பிரதாசமாக வழங்கப்படும். தொடர்ந்து, மதிய உணவுக்கு பிறகு கீழ் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்வீர்கள். தாயாரை தரிசனம் செய்துவிட்டு, மாலை 5 மணிக்கு அதே பேருந்தில் சென்னைக்கு புறப்படுவீர்கள். இரவு 9.30 மணிக்குள் சென்னை தி.நகருக்கு சென்றடைவீர்கள்.

ஐஆர்சிடி திருப்பதி பேக்கேஜ் கட்டணம்

சென்னையில் இருந்து இயக்கப்படும் ஐஆர்சிடிசி பேருந்து கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1650 முதல் ரூ.1950 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை தேவையில்லை என்றால், அவர்களுக்கு எந்த கட்டணமும் கிடையாது.

ஐஆர்சிடிசி திருப்பதி பேக்கேஜ் என்னென்ன வசதிகள்?

ஐஆர்சிடிசி திருப்பதி பேக்கேஜில் ஏசி பேருந்து பயணம், உள்ளூர் போக்குவரத்து, ரூ.300 தரிசன டிக்கெட், ஒரு வேலை காலை உணவு இடம்பெற்றிருக்கும். மதிய உணவு, இரவு, மொட்டை போடுதல், காது குத்துதல் போன்றவற்றுக்கான செலவை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஐஆர்சிடிசி திருப்பதி பேக்கேஜ் முன்பதிவு செய்வது எப்படி?

சென்னையில் இருந்து திருப்பதி செல்ல விருப்பப்படுபவர்கள் ஐஆர்சிடிசி பேக்கேஜை பயன்படுத்திக் கொள்ளுங்கள். irctctourism.com என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். எனவே, திருப்பதி ஏழுமலையானை தரிசனத்திற்கு காத்திருக்காமல் உடனே உங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.


Zee News Tamil 14 days ago
Home Flash News