Select Location
All Locations
State
Region
City / District
சர்தார் - 2 வெளியீட்டுத் தேதி!

சர்தார் - 2 வெளியீட்டுத் தேதி!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் - 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது. இதில், நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்த நிலையில், வருகிற செப். 10 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமென்பதால் பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது.


Dinakaran 7 hours ago
Home Flash News