Select Location
All Locations
State
Region
City / District
‘அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி’ - இபிஎஸ்!

‘அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி’ - இபிஎஸ்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று கட்சியின் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கின்றனர். அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தால் அது முடியாது.

மக்கள் அதிமுகவிற்கு தான் வாக்களித்து ஒவ்வொருவரையும் எம்.எல்.ஏ.வாக ஆக்கினார்கள். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து சிலர் தங்கள் கட்சியில் இணைக்கிறார்கள். இப்படி ஒரு ஆட்சியை நடத்த முதலமைச்சர் விஜய்க்கு அருகதை உள்ளதா?”. என தெரிவித்தார்.


Malaimalar 1 hour ago
Home Flash News