Select Location
All Locations
State
Region
City / District
ஐசிசி தரவரிசையில் இஷான் கிஷன் முதலிடம்! அபிஷேக் சர்மாவை முந்தினார்!

ஐசிசி தரவரிசையில் இஷான் கிஷன் முதலிடம்! அபிஷேக் சர்மாவை முந்தினார்!

ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை பின்னுக்குத் தள்ளி, சக வீரரான இஷான் கிஷன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த ஓராண்டாக அபிஷேக் சர்மா முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், தற்போது 7 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இஷான் கிஷன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் பிடித்துள்ளார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மாவுக்கு அடுத்து அந்தப் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார். இரண்டாம் இடத்தில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (869 புள்ளிகள்) மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான், (848 புள்ளிகள்) ஆகியோர் உள்ளனர். மேலும், இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அரைசதம் விளாசிய அயர்லாந்து கேப்டன் லோர்கன் டக்கர், நான்கு இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேபோல், ஐசிசி டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் புரூக் இரண்டாம் இடத்துக்கும், ரூட் மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி இரண்டாம் இடத்துக்குச் சரிந்ததைத் தொடர்ந்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், டெஸ்ட்டில் நான்காம் இடத்தில் உள்ளது.


Dinamani 2 hours ago
Home Flash News