நடிகர் சாந்தனு நடித்த பல்டி திரைப்படத்தின் ஓடிடி தேதி!
நடிகர்கள் ஷேன் நிகம், சாந்தனு நடிப்பில் உருவான பல்டி திரைப்படத்டின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்த பல்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும், சாய் அபயங்கரின் இசை கவனம் பெற்றது.
உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் கபடியை மையமாக வைத்து உருவாகியிருந்தது. நடிகர் சாந்தனு இரண்டாம் நாயகனாகவும் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
ஓராண்டுக்கு மேலாக இப்படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ஜூலை 10 ஆம் தேதி இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.