Select Location
All Locations
State
Region
City / District
ரூ. 350 கோடியுடன் 50 நாள்களை நிறைவு செய்த சூர்யாவின் கருப்பு!

ரூ. 350 கோடியுடன் 50 நாள்களை நிறைவு செய்த சூர்யாவின் கருப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கருப்பு திரையரங்குகளில் 50 நாள்களை நிறைவு செய்துள்ளது. இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், அமோக வரவேற்பைப் பெற்றது.

இதனால், நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யாவுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் சில திரையரங்குகளில் கணிசமான ரசிகர்களும் படத்தைப் பார்க்க வருகின்றனர்.

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் திரையரங்கங்களில் 50 நாளை நிறைவு செய்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம், மாபெரும் வெற்றி என கருப்பு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News