12%-க்கும் மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகளை நேரடியாக வாங்க தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவு!
டெல்லி: 12%-க்கும் மேல் ஆல்கஹால் கலந்த இருமல் சிரப், டானிக்குகள், டிஞ்சர்களை இனி மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வாங்க தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு. 30 மில்லிக்கும் அதிகமான பாட்டில்களில் விற்கப்படும் இதுபோன்ற மருந்துகளை வாங்குவோரின் விவரங்களை தனியாகப் பதிவேட்டில் பராமரிக்கவும் மருந்தகங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.