Select Location
All Locations
State
Region
City / District
வனத்துறை வசம் உள்ள 100 டன் செம்மரம் ஏலம்: குறைந்தபட்சத் தொகையாக ரூ.52.38 கோடி நிர்ணயம்

வனத்துறை வசம் உள்ள 100 டன் செம்மரம் ஏலம்: குறைந்தபட்சத் தொகையாக ரூ.52.38 கோடி நிர்ணயம்

சென்னை: வனத்துறை வசம் உள்ள 100 டன் செம்​மரம் ஏலம் கோரப்​பட்​டுள்​ளது. குறைந்​த​பட்ச ஏலத் தொகை​யாக ரூ.52.38 கோடி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. செம்​மரம் அதன் அரிய தன்​மை, கடின அமைப்​பு, உயர்ந்த சந்தை மதிப்பு காரண​மாக உலக அளவில் முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது. இசைக் கருவி​கள், அலங்​காரப் பொருட்​கள் மற்​றும் சில பாரம்​பரிய பயன்​பாடு​களுக்​காக இதற்கு வெளி​நாடு​களில் நீண்ட கால​மாக தேவை இருந்து வரு​கிறது.

இதன் காரண​மாகவே செம்​மரம் சட்​ட​விரோத வர்த்​தகத்​தில் அதி​கம் இலக்​காகி​யுள்​ளது. குளிர் அதி​கம் உள்ள நாடு​கள், இந்​தி​யா​வில் உள்ள குளிர் பிரதேசங்​களில் இந்த மரங்​கள் வளராது. வட தமிழகம், தமிழக ஆந்​திர எல்லை போன்ற மழை குறை​வாக பெய்​கிற, வறண்ட, வெப்​பம் அதி​கம் உள்ள பகு​தி​களில் மட்​டுமே செழிப்​பாக வளர்​கின்​றன. வனத்​துறை தகவல்​களின்​படி, கடந்த சில ஆண்​டு​களில் செம்​மரக் கடத்​தல் வழக்​கு​கள், பறி​முதல்​கள், கைது நடவடிக்​கைகள் அதி​கரித்​துள்​ளன. செம்​மரத்​துக்கு வெளி​நாடு​களில் அதிக விலை கிடைப்​ப​தால், கடத்​தல் கும்​பல்​கள் கூலித் தொழிலா​ளர்​களை பயன்​படுத்தி சட்​ட​விரோத​மாக மரங்​களை வெட்​டும் போக்கு உரு​வானது. இந்​நிலை​யில், பறி​முதல் செய்​யப்​பட்ட மற்​றும் சட்​டப்​பூர்​வ​மாக கையகப்​படுத்​தப்​பட்ட 100 டன் செம்​மரங்​களை திருப்​பத்​தூரில் உள்ள கிடங்​கில் வனத்​துறை வைத்​துள்​ளது. இதை வனத்​துறை​யின் திருப்​பத்​தூர் வனக்​கோட்​டம் ஏலம் விட முடிவு செய்​திருந்​தது. இதற்​கான ஒப்​புதலை மத்​திய அரசிடம் இருந்து சமீபத்​தில் பெற்​றது. ஏலம் வெளிப்​படைத் தன்​மை​யுடன் இருக்க வேண்​டும். சிண்​டி கேட் அமைத்து ஒப்​பந்​த​தா​ரர்​கள் குறைந்த விலை​யில் ஏலம் எடுத்​து​விடக் கூடாது.

அரசுக்கு அதிக வரு​வாய் வர வேண்​டும் என்ற நோக்​கத்​தில் மத்​திய அரசின் ஏல நிறு​வன​மான எம்​எஸ்​டிசி (MSTC) மூல​மாக தற்​போது சர்​வ​தேச அளவில் மின் ஏலம் விடப்​பட்​டுள்​ளது. இதில் குறைந்​த​பட்ச ஏலத்​தொகை​யாக, இருப்​பில் உள்ள 80 டன் ‘சி’ கிரேடு செம்​மரம், ஒரு டன் 62,014 அமெரிக்க டால​ராக​வும் (ரூ.59,11,825), ‘சி’ கிரேடு அல்​லாத 20 டன் செம்​மரம், ஒரு டன் 26,679 டால​ராக​வும் (ரூ.25,43,322) நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய ரூபாய் மதிப்​பில் இது ரூ.52.38 கோடி​யாக உள்​ளது. இதற்கு மேல்​தான் இணைய வழி​யில் ஏலம் கேட்க முடி​யும்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News