Select Location
All Locations
State
Region
City / District
அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படமான மைக்கேல்! தலை சுற்ற வைக்கும் வசூல்!

அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படமான மைக்கேல்! தலை சுற்ற வைக்கும் வசூல்!

உலகளிலேயே அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படம் என்கிற சாதனையைச் செய்தது மைக்கேல். அன்டொய்ன் ஃபகா இயக்கத்தில் உருவான மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான மைக்கேல் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஏப். 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் ஜாபர் ஜாக்சன் (மைக்கேல் ஜாக்சனின் உறவினர்) நடித்திருந்தார்.

ஆனால், இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் மிகப்பெரிய பயோபிக் படங்களில் இதுவே சுமாரானது என்றும் விமர்சனங்கள் வந்தன. இந்தக் கலவையான விமர்சனங்களால் படம் வணிக அளவில் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிரடியாக வசூலைக் குவிக்க ஆரம்பித்த இப்படம் வெளியான சில நாள்களிலேயே ரூ. 3000 கோடி வசூலைக் கடந்தது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் 1 பில்லியன் டாலர் (ரூ. 9,600 கோடிக்கும் மேல்) வசூலித்து ஹாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக ஒரு பயோபிக் திரைப்படம் அபாரமான வசூலைச் செய்திருப்பது இதுவே முதல்முறை. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.


Dinamani 1 hour ago
Home Flash News