Select Location
All Locations
State
Region
City / District
தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் - முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் - முதலமைச்சர் விஜய் உத்தரவு

விரைவில் தமிழகத்தில் அதிவிரைவு சாலைகளை அமைக்க திட்டம் தீட்டவும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் இன்னும் ஏன் அதிவிரைவு சாலைகள் அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

விரைவில் தமிழகத்தில் அதிவிரைவு சாலைகளை அமைக்க திட்டம் தீட்ட அவர் அறிவுறுத்தினார். மேலும், தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நகர்புற வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு சாலை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கவும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.


Malaimalar 1 hour ago
Home Flash News