Select Location
All Locations
State
Region
City / District
சராசரி கார் உரிமையாளர், வீட்டில் இருந்தபடியே மைலேஜை கணக்கிட முடியாது

சராசரி கார் உரிமையாளர், வீட்டில் இருந்தபடியே மைலேஜை கணக்கிட முடியாது: எத்தனால் பெட்ரோல் சர்ச்சைக்கு நிதின் கட்கரி பதில்!

மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்தபிறகு, வாகனங்களின் மைலேஜ் குறைவதாக புகார்கள் எழுந்துவரும் நிலையில், ஒரு சாதாரண கார் உரிமையாளரால் தனது காரின் மைலேஜை தானாக கணக்கிட முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம் மைலேஜ் குறைவுத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நீங்களோ, நானோ வீட்டில் இருந்தபடி மைலேஜைச் சரிபார்க்க முடியாது. நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களின் சிறப்புப் பரிசோதனைக் கருவிகள் மூலமே துல்லியமான மைலேஜை அளவிட முடியும்” என தெரிவித்தார். தொடர்ந்து பெட்ரோலை விட எத்தனாலின் கலோரிஃபிக் மதிப்பு குறைவு என்பதால் மைலேஜில் சிறிதளவு குறைவு ஏற்படுவது இயல்பானதுதான் என்றும் ஒப்புக்கொண்டார்.

வீட்டிலிருந்தபடியே வாகனத்தின் மைலேஜை துல்லியமாகச் சரிபார்க்க முடியாதா? இல்லை. கணினி மூலம் காட்டப்படும் மைலேஜ் ஒரு தோராயமான மதிப்பீடே தவிர, 100% துல்லியமானது அல்ல. சுயமதிப்பீடு, உண்மையான மதிப்பீட்டிலிருந்து 2-5% வரை வேறுபடும் எனக் கூறப்படுகிறது.

ஃபுல் டேங்க் முறை: மறுபுறம் கார் ஓட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தும், டேங்கை முழுமையாக நிரப்பி, கிலோமீட்டரைக் கணக்கிடும் ஃபுல் டேங்க் முறை ஓரளவிற்கு நிஜ மைலேஜ் விபரத்தைத் தரும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Malaimalar 58 minutes ago
Home Flash News